2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

சி.வி. வரலாற்று தவறிழைத்துள்ளார் : யோகேஸ்வரி

Kanagaraj   / 2014 மே 28 , பி.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவிற்குச் செல்லாமல் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வரலாற்று தவறிழைத்துள்ளதாக யாழ். மாநகர மேயர் யோகேஸ்வரி பற்குணராசா இன்று புதன்கிழமை (28) தெரிவித்தார்.

பதவியேற்பு விழாவிற்குச் சென்றுவிட்டு இன்று (28) காலை யாழ்ப்பாணம் திரும்பி அவரிடம் உங்கள் பயணம் எவ்வாறு அமைந்ததென கேட்டபொழுதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்;

பதவியேற்பு விழாவிற்குச் செல்வது மிகப்பெரிய சந்தர்ப்பம். அதற்கான அழைப்பு ஜனாதிபதியினால் முதலமைச்சருக்கு விடுக்கப்பட்ட போதும், அவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் இணைந்து அதனை மறுத்து, தவறிழைத்துவிட்டார்கள்.

தொடர்ந்து தமிழர் சார்பாக பிரதிநிதியொருவரை அழைத்துச் செல்லும் பொருட்டு ஜனாதிபதியினால் எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

பதவியேற்பு முடிந்த மறுநாள் நாங்கள் கலந்துரையாடுவதற்கு 30 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது. இதன்போது மோடிக்கும் இலங்கை ஜனாதிபதிக்கும் இடையில் இணக்கமான சுமூகமான பேச்சுக்கள் இடம்பெற்றன.

இதில் 13 ஆவது திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்ற வகையில் பேச்சுக்கள் இருந்தன.

அத்துடன் வடமாகாணத்தில் இடம்பெற்ற தேர்தல், மீள்குடியேற்றம், அபிவிருத்தி என்பனவற்றை ஜனாதிபதி மோடிக்கு எடுத்துரைக்கும் போது, கல்விப் பொதுத் தராதரச் சாதாரண தரத்தில் வடமாகாணம் முதலிடம் பெற்றமையும் எடுத்துரைத்ததாக யோகேஸ்வரி மேலும் தெரிவித்தார்.                                                 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .