2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

பெரும்பான்மையின மாணவர்களின் நல்லிணக்க விஜயம்

Kanagaraj   / 2014 மே 29 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஒலுமுதீன் கியாஸ் 


கல்வி அமைச்சின் இரு நகரங்களின் இரு நண்பர்கள் என்ற செயற்றிட்டத்தின் கீழ் இன நல்லிணக்க விஜயம் ஒன்றை மேற்கொண்டு மாத்தளை வில்கமுவௌ வலயக்கல்வி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் இன்று வியாழக் கிழமை (29) கிண்ணியா மத்திய கல்லூரியை வந்தடைந்தனர்.

15 பாடசாலைகளைச் சேர்ந்த 90 மாணவர்களும் 10 ஆசிரியர்களும் இரண்டு பெற்றார்களும் வலயக்கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள் ஐவரும் இந்தப் பயணத்தில் இணைந்திருந்தனர்.

இவர்கள், கிண்ணியா மத்திய கல்லூரி அதிபர் ஏ.ஜே.எம்.றூமி தலைமையில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் வரவேற்கப்பட்டனர்.

இஸ்லாம் ஏனைய மதங்களையும் கலாசாரங்களையும் எவ்வாறு மதிக்கின்றது என்பதை எடுத்துக்காட்டும் முகமாக கிண்ணியா மத்திய கல்லூரி மாணவர்களால் அரங்கேற்றப்பட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளை அவர்கள் கண்டு களித்தனர். 






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .