2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

உண்டியலில் திருடிய இருவருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2014 மே 30 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன் 

யாழ். வேலணை, செட்டிபுலம் வைரவர் ஆலயத்திலுள்ள  உண்டியலை உடைத்து  2,400 ரூபாவை திருடியதாகக் கூறப்படும் இருவரை 14 நாட்களுக்கு  விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் நேற்று வியாழக்கிழமை உத்தரவிட்டார்.

அநுராபுரம் பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுவனும்  மற்றும்  ஊர்காவற்றுறையைச் சேர்ந்த 18 வயதுடைய ஒருவருமே  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி ஆலய உண்டியல் உடைத்து பணத்தை திருடிச் சென்றுகொண்டிருந்த இவர்கள் மீது சந்தேகமடைந்த  வீதிக்கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், விசாரித்துள்ளனர்.

இதன்போது, குறித்த இருவரும்  உண்டியல் உடைத்து திருடியதாக கூறியதைத் தொடர்ந்து கடந்த புதன்கிழமை இவர்களை ஊர்காவற்றுறை பொலிஸார் கைதுசெய்திருந்தனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .