2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம்

Kogilavani   / 2014 மே 30 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.றொசாந்த்


யாழ்.மாவட்டத் தேர்தல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வாக்களர் விழிப்புணர்வு ஊர்வலம் வெள்ளிக்கிழமை (30) யாழில் இடம்பெற்றது.

யாழ்.பிரதம தபால் நிலைய முன்றலில் இருந்து ஆரம்பமான மேற்படி ஊர்வலம் சத்திரத்துச் சந்தி வழியாக யாழ்.பேருந்து நிலையத்தினை அடைந்தது. அங்கு நின்றிருந்த பொதுமக்களுக்கு வாக்காளர் பதிவுகள் தொடர்பிலான விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரங்கள் இதன்போது வழங்கப்பட்டன.

தொடர்ந்து, ஊர்வலம் வேம்படிச் சந்தி வழியாக மீண்டும் பிரதம தபால் நிலையத்தினை வந்தடைந்தது.

மேற்படி ஊர்வலம் எதிர்வரும் ஜுன் மாதம் 1 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள வாக்காளர் தினத்தினை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த ஊர்வலத்தில் யாழ்.மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகம், யாழ்.மாவட்டத் உதவித் தேர்தல் ஆணையாளர் சி.குகநாதன், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .