2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

சிறுமியை கடத்தியவருக்கு விளக்கமறியலில்

Kogilavani   / 2014 மே 30 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்.கல்வியங்காடு செம்மணி வீதியினைச் சேர்ந்த 14 வயதுச் சிறுமியொருவரை கடத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நபரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக யாழ்.பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியசட்கர் டி.எம்.திலகரட்ண வெள்ளிக்கிழமை (30) தெரிவித்தார்.

யாழ். தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (30) இடம்பெற்ற வாராந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

உரும்பிராய் கிழக்கினைச் சேர்ந்த மேற்படி நபர் கடந்த செவ்வாய்க்கிழமை (27) குறித்த சிறுமியினைக் கடத்திச் சென்றதாக சிறுமியின் பெற்றோர்களினால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

அந்த முறைப்பாட்டின் பிரகாரம் மேற்படி நபர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .