2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

மாநகர சபையின் தற்காலிக தொழிலாளர்கள் போராட்டம்

Kanagaraj   / 2014 மே 30 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-    எம்.றொசாந்த்


யாழ்.மாநகர சபையில் தற்காலிக தொழிலாளர்களாகக் கடமையாற்றி வரும் 10 தொழிலாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை (30) காலை முதல் மாநகர சபை முன்றலில் போராட்;டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

10 தொடக்கம் 15 வருடங்கள் வரையில் கடமையாற்றி வரும் தங்களை நிரந்தர நியமனம் வழங்கவில்லையெனக் கூறியே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாநகர சபையில் கடமையாற்றி வந்த 37 பதில் தற்காலிக தொழிலாளர்களில் 27 பேருக்கு இன்று வெள்ளிக்கிழமை (30) மாலை நிரந்தர நியமனங்கள் மாநகர சபையில் வைத்து வழங்கப்படவுள்ளது.

இந்நிலையில் தாங்கள் 10 பேரும் மாநகர எல்லைக்கு அப்பால் வசிக்கின்றமை என்பதைக் காரணம் காட்டி ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறியே அவர்கள் இந்தப் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

மேற்படி 37 பேரும் 2013 ஆம் ஆண்டு ஒக்ரோபர் 1 ஆம் திகதி மாநகர முன்றலில் நிரந்தர நியமனம் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட போது, இவர்களுக்கான நியமனங்கள் வழங்கப்படும் என மாநகர சபையும் தொழில் திணைக்களமும் உறுதியளித்திருந்ததினைத் தொடர்ந்து இவர்கள் தங்கள் போராட்டத்தினைக் கைவிட்டிருந்தனர்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி அனுப்பப்பட்ட நியமனங்கள் வழங்கப்படவுள்ளதான கடிதங்கள் 27 பேருக்கு மாத்திரம் அனுப்பப்பட்டதுடன், மிகுதி 10 பேருக்கும் அனுப்பப்படவில்லை.

இது தொடர்பாக குறித்த 10 பேரும் மாநகர சபையிடம் வினாவிய போது, எல்லைக்கு அப்பால் வசிக்கின்றமையினால் நியமனம் வழங்க முடியவில்லையெனத் தெரிவித்துள்ளனர்.

இன்று (30) மாலை நடைபெறவுள்ள நிமயனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டு நியமனக் கடிதங்களை வழங்கி வைக்கவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .