2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

ஒலி பெருக்கிகள் ஒலிக்க அயலவர்களின் ஒத்துழைப்பு வேண்டும்

Menaka Mookandi   / 2014 மே 30 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழில் ஆலயங்கள் மற்றும் நிகழ்வுகளில் ஒலிபெருக்கிகளை ஒலிக்கவிடுவதற்கு அயலவர்களின் வாய்மூல ஒப்புதல் வேண்டும் என யாழ். பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியசட்கர் டி.எம்.திலகரட்ண இன்று வெள்ளிக்கிழமை (30) தெரிவித்தார்.

யாழ். தலைமைப் பொலிஸ் நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை (30) இடம்பெற்ற வாராந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஆலயங்களில் இடம்பெறும் நிகழ்வுகளில் ஒலிபெருக்கியினை ஒலிக்கவிடுவதற்கு பொலிஸ் நிலையத்தில் அனுமதி பெற்றப்பட வேண்டும். அத்துடன், ஆலயங்களைச் சூழவுள்ளவர்களின் வாய்மொழி ஒப்புதல் பெறப்பட்ட பின்னரே அதற்கான அனுமதி வழங்க முடியும் என அவர் தெரிவித்தார்.

அத்துடன், அளவுக்கு அதிகமான சத்தத்துடன் ஒலிபெருக்கிகளை ஒலிக்கவிடுதல் தொடர்பாக பொதுமக்கள் தொலைபேசி மூலம் பொலிஸ் நிலையத்திற்கு அறியத்தந்தால் பொலிஸார் அவ்விடத்திற்கு வந்து நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .