2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மணல் அகழ்ந்தவர்கள் விடுதலை

Kanagaraj   / 2014 ஜூன் 03 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்
யாழ்.சாவகச்சேரி கச்சாய்ப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மூவருக்கும் எதிராக, போதிய ஆதாரங்களை பொலிஸார் முன்வைக்காத காரணத்தினால,; அவர்களை வழக்கிலிருந்து விடுவிப்பதாக சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரம் இன்று செவ்வாய்க்கிழமை (03) உத்தரவிட்டார்.

குறித்த மண் அகழ்வில் ஈடுபட்டவர்களையும் அது தொடர்பான தகவல்களையும் திரட்டி மீண்டும் ஆகஸ்ட் மாதம் 27ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும்படி நீதவான் கொடிகாமம் பொலிஸாரிற்கு உத்தரவிட்டார்.

மூவர் சார்பாகவும் நீதிமன்றத்தில் ஆஜராகிய சட்டத்தரணி, குறித்த மூவரும் மண் அகழ்வில் ஈடுபடவில்லையெனவும், குறித்த மூவரும் சாதாரணமாக வீதியில் நின்றிருந்தனர் எனவும் தெரிவித்திருந்தார்.

மேற்படி பகுதியில் மண் அகழ்வில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் நேற்று திங்கட்கிழமை (02) மாலை மூவர் கைது செய்யப்பட்டதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்திருந்தனர். தொடர்ந்து அவர்களை இன்று (03) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போதே நீதவான் மேற்படி உத்தரவினைப் பிறப்பித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .