2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

தவறான அரசியல் வழிநடத்தலே இந்நாடு இரத்தத்தில் மூழ்கக் காரணம்: டக்ளஸ்

Menaka Mookandi   / 2014 ஜூன் 05 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒருகால கட்டத்தில், யுத்தம் காரணமாக இந்நாடு இரத்தத்தில் மூழ்க தவறான அரசியல் வழிநடத்தல்களே காரணமாகின. இவ்வாறாதொரு கொடிய யுத்தத்துக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே முற்றுப்புள்ளி வைத்தார் என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் புதன்கிழமை (04) இடம்பெற்ற உலக இரத்தான தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், உலக இரத்தான நிகழ்வில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சியடையும் அதேவேளை, இதனை ஏற்பாடு செய்த ஏற்பாடாளர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.

தானத்தில் சிறந்த தானமாக இரத்ததானம் கருதப்படுகின்றது. ஒரு காலகட்டத்தில் தவறான அரசியல் வழிநடத்தல்கள் காரணமாக இந்நாடு இரத்தத்தில் மூழ்கடிக்கப்பட்டிருந்தது.

அவ்வாறு இந்நாட்டில் இடம்பெற்று வந்த கொடிய யுத்தத்தை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முடிவுக்குக் கொண்டுவந்து முற்றுப்புள்ளி வைத்தார் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

சர்வதேச நாடுகள் உலக இரத்தான நிகழ்வை இலங்கையில் கடைப்பிடிக்க அங்கீகாரம் வழங்கியுள்ளமை சிறப்பம்சமாகும். எனவே, ஆரோக்கியமான சமூகத்தை கட்டியெழுப்ப எமது மக்கள் இவ்வாறானதொரு குருதிக் கொடையை வழங்குவதற்கு முன்வர வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்;டார்.

இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி உரையாற்றுகையில் கூறியதாவது, 2004ஆம் ஆண்டு முதல் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் இத்தினம் ஏற்பாடு செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.அந்தவகையில் இத்தினம் இவ்வாண்டு இலங்கையில் முன்னெடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

இலங்கையின் தேசிய நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் கொண்;டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட தாய்மார்கள் பங்கெடுங்கவுள்ளனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நெறிப்படுத்தலிலும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரது ஆலோசனை மற்றும் வழிகாட்டலுடன் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடமாகாணத்தில் சுகாதாரத்துறை பல்வேறு வழிகளில் முன்னேற்றம் கண்டு வருகின்றது.

இவ்வாறான முன்னேற்ற மேம்பாட்டு செயற்பாடுகளுக்கு மாவட்ட மற்றும் மாகாண சுகாதாரத்துறை சார்ந்தோர் தமது முழுமையான பங்களிப்பினை வழங்கி வருகின்றனர் என்றும் வட மாகாண ஆளுநர் மேலும் தெரிவித்தார்.

தூய உதிரம் அண்னையாரை காக்கும் என்ற தொனிப்பொருளில் உலக இரத்தான தினம் கடைப்பிடிக்கப்படுகின்ற நிலையில் இதன் 11ஆவது சர்வதேச நினைவு தினம் எதிர்வரும் 15ஆம் திகதி இலங்கையில் கடைப்பிடிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .