2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

தமிழ் மொழி கற்ற இராணுவத்தினருக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2014 ஜூன் 06 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


- எம்.றொசாந்த், செல்வநாயகம் கபிலன், நா.நவரத்தினராசா


தமிழ்மொழியினை கற்று வெளியேறிய 1212 இராணுவ வீரர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு காங்கேசன்துறையில் அமைந்துள்ள தல்சேவன விருந்தினர் விடுதியில் வியாழக்கிழமை (05) இடம்பெற்றது.

யாழ்.மாவட்ட படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உதயபெரேரா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 17 அதிகாரிகளும் 1195 சாதாரண படை வீரர்களுமாக மொத்தமாக 1212 இராணுவத்தினர் சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டனர்.

அத்துடன், முதல் ஆறு இடங்களைப் பெற்றவர்களுக்கு தங்கப்பதக்கங்களும் அணிவிக்கப்பட்டன.

1 மாதகாலம் கொண்ட இந்தக் கற்கைநெறியினை 53 படைபிரிவுகளை சேர்ந்த 1600 வீரர்கள் மேற்கொண்டிருந்தனர்.

இந்தக் கற்கைநெறியில் வாசிப்பு, எழுத்து, கிரகித்தல் போன்ற விடயங்கள் போதிக்கப்பட்டதுடன், தமிழ் வானொலிகள் கேட்டல், தமிழ்ப் பத்திரிகைகள் படித்தல் போன்ற விடயங்களும் உள்ளடக்கப்பட்டிருந்தன.

521 படைப்பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் பிரியந்த ஜெயசுந்தர தலைமையில் இந்தக் கற்கைநெறி நடத்தப்பட்டது.

சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான மனித உரிமைகளின் தொடர்பாடல் இணைப்பாளர் அனாஸ் அசோஸ், கடற்படைத்தளபதி ரியல் அட்மிரல் சரத் திசாநாயக்க, பலாலி வான்படை கொமாண்டர் ஜீ.எஸ்.பி நாணயக்கார, யாழ்.மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம், வடமாகாண சிரேஷ;ட பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர, காங்கேசன்துறை பொலிஸ் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தமயந்த சிறி, பிரேதச செயலாளர்கள், படை அதிகாரிகள், மதகுருமார்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .