2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மரக்குற்றிகளை விற்றவர் கைது

Suganthini Ratnam   / 2014 ஜூன் 06 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


- எம்.றொசாந்த், செல்வநாயகம் கபிலன்

யாழ். அரியாலை பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி காட்டு மரக்குற்றிகளை  இரகசியமாக விற்பனை செய்து வந்ததாகக் கூறப்படும் ஒருவரை  இன்று வெள்ளிக்கிழமை கைதுசெய்ததாக யாழ்;ப்பாண பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், இவரிடமிருந்து 350,000 ரூபா பெறுமதியான முதிரை மற்றும் பாலை மரக்குற்றிகளை கைப்பற்றியதாகவும்  பொலிஸார் கூறினர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து,  யாழ். பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் டி.எம்.ஜெயதிலக்க தலைமையில் சென்ற குழுவினர் சந்தேக  நபரை கைதுசெய்தனர்.

சந்தேக நபர் வன்னியிலிருந்து கொண்டுவந்து  மரக்குற்றிகளை  இரகசியமாக விற்பனை செய்ததாகவும்; பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .