2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

மீன்பிடிக்கச் சென்றவர்களில் ஒருவர் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2014 ஜூன் 08 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ற.றஜீவன் 

புத்தளம், குரக்கன்கேன கல்பிட்டிய பகுதியிலிருந்து  மீன்பிடிப்பதற்காக  பலநாட்கலமொன்றில் சென்ற 05 பேரில் ஒருவர் உயிரிழந்த நிலையில், அப்பலநாட்கலம் ஞாயிற்றுக்கிழமை (08) அதிகாலை பருத்தித்துறை துறைமுகத்தை வந்தடைந்ததாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

வர்ணகுலசூரிய ஸ்ரான்லி யஸ்ரின்கொஸ்தா (வயது 62) என்பரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேற்படி பகுதியிலிருந்து இப்பலநாட்கலம் 05 பேருடன்  மே மாதம் 28ஆம் திகதி புறப்பட்டிருந்தது. இந்நிலையில், கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, மேற்படி நபர் ஞாயிற்றுக்கிழமை (08) அதிகாலை திடீரென உயிரிழந்துள்ளார். இதனால், தங்களது பலநாட்கலத்தை பருத்தித்துறை துறைமுகத்தில் கரைசேர்த்ததாக ஏனைய 04 பேரும் தெரிவித்துள்ளதாகவும்  பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .