2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

விபத்தில் மூவர் படுகாயம்

Suganthini Ratnam   / 2014 ஜூன் 09 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நா.நவரத்தினராசா 

யாழ். மல்லாகம்  07ஆம் கட்டைப்பகுதியில் சைக்கிளொன்றுக்கு பின்னால் வேகமாக வந்துகொண்டிருந்த  மோட்டார் சைக்கிளொன்று மோதியதால்  படுகாயமடைந்த  மூவர் வைத்தியசாலைகளில்; ஞாயிற்றுக்கிழமை (08) மாலை அனுமதிக்கப்பட்டதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில் படுகாயமடைந்த கந்தரோடையைச் சேர்ந்த இரத்தினசிங்கம் சிவலிங்கராசா (வயது 64), செல்லத்தரை செல்வராசா (வயது 48), சுந்தரலிங்கம் சுதர்சன் (வயது 28) ஆகியோர் உடனடியாக  தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில் சுந்தரலிங்கம் சுதர்சன் என்பவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

குறித்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்ததால் இவ்விபத்து இடம்பெற்றதாகவும்  பொலிஸார் கூறினர். 
 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .