2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'இளைஞர் கரங்களால் பசுமை உலகம்' செயற்றிட்டம்

Suganthini Ratnam   / 2014 ஜூன் 10 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


வலி. தென்மேற்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளன வழிகாட்டலின் கீழ், பிரதேச இளைஞர் கழகங்களின் ஒன்றிணைந்த ஏற்பாட்டில் வலி. தென்மேற்கு பிரதேசங்களில் 'இளைஞர் கரங்களால் பசுமை உலகம்' என்ற செயற்றிட்டம் செவ்வாய்க்கிழமையிலிருந்து (10) முன்னெடுக்கப்படுகின்றது.

இச்செயற்றிட்டத்தில் மரக்கன்றுகள் நடுகை, விழிப்புணர்வுக் கூட்டங்கள், ஒலி மாசினைக்; கட்டுப்படுத்துதல் போன்ற விடயங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதன் முதற்கட்டமாக நவாலி அட்டகிரி சைவ வித்தியாசாலை வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. 

இந்நிகழ்வில் பிரதேச இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் க.உஷாந்தன், பிரதேச இளைஞர் கழக சம்மேளனத் தலைவர் ச.செந்தில்குமரன், பிரதேச இளைஞர் கழக சம்மேளன உப செயலாளர் தி.தர்சிகா, மானிப்பாய் மேற்கு இளைஞர் கழகத் தலைவர் செ.கீர்த்தனா, செயலாளர் பே.சாம்பவி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .