2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

மிருகபலிக்கு யோகேஸ்வரன் எம்.பி கண்டனம்

Menaka Mookandi   / 2014 ஜூன் 15 , மு.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அனாம்

'இந்து என்றால் ஹிம்சை செய்யாதவன் என்று அர்த்தப்படும். ஆனால் இன்று இந்து சமய ஆன்மீகத்தை வளர்க்க வேண்டிய இந்து ஆலயங்கள் ஒரு சில இந்து ஆன்மீகம் என்ற போர்வையில் இந்து சமயத்துக்கு முரணான வகையில் ஆடு, கோழிகளை ஆலயங்களில் பலியிடுவதை மிக மிக வன்மையாக கண்டிக்கின்றேன்' என மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும், கிழக்கு இந்து ஒன்றியத் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

யாழ்ப்பாணம், கீரிமலை, கவுணாவத்தை நரசிங்க வைரவர் ஆலயத்தில் வருடாந்தம் ஆலய உற்சவத்தில் மிருக உயிர்பலி இடும் செயற்பாடு நடைபெற்று வருவதையிட்டு இச்செயற்பாட்டை இவ்வருடம் முதல் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற ரீதியில் சிவமானிட மேம்பாட்டு நிறுவனமும், சைவ மகா சபையும், அகில இலங்கை இந்து மாமன்றமும், இந்து ஆன்மீக உணர்வாளர்கள் பலரும் பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டனர். சிலர் நீதிமன்றம் வரை சென்று தமது கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

ஆனால் இலங்கை சட்டத்தில் பிரதேச சபைக்கான அதிகாரத்தில் மிருகவதை சார்பாக சில சரத்துக்கள் முன்வைக்கப்பட்டு பிரதேச சபை இதற்கான  தீர்மானத்தை வழங்க அதிகாரம் அளிக்கப்பட்டது. ஆனால் இப்பிரதேச சபை இந்து ஆலயத்தில் மிருக பலி இடும் நடவடிக்கைக்கு ஆதரவளித்துள்ளது. இது மிக வேதனையான சம்பவமும், கண்டிக்கப்பட வேண்டிய விடயமும் ஆகும்.

கீரிமலை, கவுணாவத்தை நரசிங்க வைரவர் ஆலயத்தில் மிருகப் பலியிடுவதை எதிர்த்து இந்து அமைப்புக்கள் மேற்கொள்ளும் சாத்வீக போராட்டங்களில் அடியேனும் கலந்துகொள்ள தீர்மானித்து இருந்தேன். இவ்வேளை வாழைச்சேனை புதுக்குடியிருப்பு கோராவெளி கண்ணகி அம்மன் ஆலயத்தில் வருடாந்த உற்சவம் நடைபெற்றுக் கொண்டிருந்ததால் இதன் பிரதம பூசகராக அடியேன் உள்ளதால் இங்கிருந்து இந்நிகழ்வுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

ஆனால் இது சார்பாக உரிய நடவடிக்கை                                                       மேற்கொள்ளும் இந்து அமைப்புக்களுடன் தொடர்பாக இருந்தேன். இவ் அமைப்புக்கள் இந்து, சைவ மக்களை உண்மையான ஆன்மீக ரீதியில் செயற்பட அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கின்றது. கீரிமலை கவுணாவத்தை நரசிங்க வைரவர் ஆலயத்தில் மிருகப்பலியிடுதல் சார்பாக மேற்கொள்ளப்பட்ட வழக்கின் தீர்ப்பு வெளியான செய்தி கிடைத்ததும் இவ் இந்து அமைப்புக்கள் என்னிடம் தொடர்பு கொண்டன.

ஆலயங்களில் உயிர்பலியிடுதலை தடுக்கும் முகமாக இதற்கு அனுமதி அளிப்பதை தடுப்பதற்காக வலிகாமம் வடக்கு பிரதேச சபை தலைவரை தொடர்பு கொண்டேன். அவர் வைத்தியசாலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதன்பின் வட மாகாண முதலமைச்சர் அவர்களை தொடர்பு கொள்ள முயற்சித்தும் முடியாமல் போனது, பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசுக் கட்சியின் செயலாளர் நாயகமுமான கௌரவ மாவை சேனாதிராஜா ஐயா அவர்களுடன் தொடர்புகொண்டு மிருகப் பலியை ஆலயங்களில் மேற்கொள்ளல் இந்து ஆன்மீகத்துக்கு பொருத்தமற்றது என்பதை எடுத்துக் கூறி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கீழ் வலிகாமம் வடக்கு பிரதேச சபை உள்ளதால் இது சார்பான ஆலோசனையை தெரிவித்து இந்து ஆலயத்தில் மிருகப் பலி இடுதலை தடுத்து நிறுத்துங்கள் என வேண்டிக் கொண்டேன். இதற்கு தான் உரியவர்களுடன் தொடர்பு கொண்டு பேசுவதாக எனக்கு கூறினார்.
 
ஆனால் குறித்த ஆலயத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கீழ் உள்ள வலிகாமம் வடக்கு பிரதேச சபை உயிர்பலி இடுவற்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளதை இட்டு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அபிமான குடும்பத்தை சேர்ந்தவர் என்ற ரீதியிலும், அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலும், இந்து ஆன்மீகத்தை வாழ்க்கையில் இயன்றவரை கடைப்பிடித்து வருபவன் என்ற ரீதியிலும் எனது மிகுந்த கவலையை தெரிவிக்கின்றேன் என்பதை இவ்வறிக்கை மூலம் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .