2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

ஆட்டு இறைச்சிகள் எரிப்பு

Kanagaraj   / 2014 ஜூன் 15 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நா.நவரத்தினராசா 


யாழ்.கீரிமலை கவுணாவத்தை நரசிம்ம வைரவர் ஆலயத்தின் இடம்பெற்ற வேள்வியில் வெட்டப்பட்ட கிடாய் ஆடுகளின் இறைச்சியை பொது இடத்தில் வைத்து பங்குபோட்டதாகப் பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு ஆடுகளின் இறைச்சியும் தெல்லிப்பளை கூட்டுறவு வைத்தியசாலை அமைந்துள்ள வாளாகத்தின் வாசலில் வைத்து ஞாயிற்றுக்கிழமை (15) எரியூட்டப்பட்டது.

பொதுஇடத்தில் வைத்து பங்கு போட்டதாகக்கூறி குறித்த இரண்டு ஆடுகளின் இறைச்சியும் தெல்லிப்பளை சுகாதார வைத்தியதிகாரி, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் இணைந்து நேற்று சனிக்கிழமை (14) பறிமுதல் செய்தனர்.

1 இலட்சம் ரூபா பெறுமதியான ஆடொன்றின் இறைச்சியும் , 50 ஆயிரம் ரூபா பெறுமதியான மற்றய ஆட்டின் இறைச்சியுமே இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில் குறித்த ஆடுகளின் இறைச்சியை மல்லாகம் நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ஜோய் மகிழ்மகா தேவா முன்னிலை ஆஜர்ப்படுத்திய போது, அதனை உரிமையாளர்களிடம் கையளிக்கும்படி நீதவான் உத்தரவிட்டார்.

அதற்கிணங்க சுகாதார வைத்தியதிகாரி, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள ஆடுகளை உரிமையாளர்களிடம் கையளிக்க முற்பட்ட வேளை, 'பிற்பகல் வேளை ஆகியதினால் இனிமேல் ஆடுகளைப் பங்குபோட முடியாது' எனக்கூறிய உரிமையாளர்கள் ஆட்டுகளின் இறைச்சியை ஏற்க மறுத்ததுடன், அதற்குரிய பணத்தினைத் தரும்படி சுகாதார வைத்தியதிகாரியிடம் கோரியுள்ளனர்.

இது தொடர்பில் இரு தரப்பினரையும் சமரசம் செய்யும் நடவடிக்கையில் தெல்லிப்பளை பொலிஸார் மேற்கொண்ட போதிலும், அது பயனளிக்கவில்லை. 

இந்நிலையில் ஆடுகளின் இறைச்சி  பழுதடைந்தமையினால் அவை தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. இருந்தும் தீ மூட்டி எரிக்கப்பட்டமை சரியாக எரிக்கப்பட்டாமையினால் அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுவதினால்; சுகாதாரச் சீர்கேடுகளை எதிர்நோக்குவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .