2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

யுவதி மீது இளைஞன் தாக்குதல்

Kogilavani   / 2014 ஜூன் 16 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ற.றஜீவன்

யாழ்.பருத்தித்துறை கற்கோவளம் கடற்கரை வீதியால் ஞாயிற்றுக்கிழமை (15) மாலை துவிச்சக்கரவண்டியில் சென்ற 19 வயது யுவதி மீது இளைஞர் ஒருவர் தாக்குதல் மேற்கொண்டதாக யுவதியின்; பெற்றோரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

கற்கோவளத்தினைச் சேர்ந்த 26 வயதினையுடைய இளைஞனே இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இளைஞன் தற்போது தலைமறைவாகியுள்ளார்.

குறித்த யுவதி துவிச்சக்கரவண்டியில் கடைக்குப் பொருட்களை வாங்குவதற்காகச் சென்ற வேளை கடற்கரை வீதியில் நின்றிருந்த மேற்படி இளைஞன் யுவதியை மறித்து தாக்கியுள்ளான்.

தொடர்ந்து அவ் யுவதி அணிந்திருந்த ஆடைகளை கிழித்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளான். இது தொடர்பாக குறித்த பெண் தனது பெற்றோருக்குத் தெரிவித்ததினையடுத்து, பெற்றோர் பருத்தித்துறைப் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X