2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

இந்திய வியாபாரிகள் இருவர் கைது

Suganthini Ratnam   / 2014 ஜூன் 16 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன்

சுற்றுலா விஸாவில் வந்து யாழ். தெல்லிப்பழை பகுதியில் புடைவை வியாபாரத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இந்திய புடைவை வியாபாரிகள் இருவரை தெல்லிப்பழை பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (15) கைதுசெய்ததாக  தெல்லிப்பழை பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் ஐ.என்.எஸ்.கஸ்தூரியாரட்சி  தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் இராமநாதபுரத்தைச்; சேர்ந்த தாயான அழகர்சாமி ராஜாஅம்பாள் (வயது 44), அவரது மகனான  அழகர்சாமி மகேந்திரன் (வயது 23) ஆகிய இருவருமே கைதுசெய்யப்பட்டனர்.

இவர்களிடமிருந்து புடைவைகள் அடங்கிய 03 பொதிகளை கைப்பற்றியதாகவும் அவர் கூறினார்.

இவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .