2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

தங்கூசி வலை பாவிப்பதை கைவிட்ட மீனவர்கள்

Suganthini Ratnam   / 2014 ஜூன் 16 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


- செல்வநாயகம் கபிலன் 

யாழ். மண்டைதீவு மீனவர்கள் சங்கத்தைச் சேர்ந்த 150 மீனவர்கள், தடைசெய்யப்பட்ட தங்கூசி வலைகளை பாவித்து மீன்பிடிப்பதை தாங்களாகவே  கைவிடுவதாக தெரிவித்து இது தொடர்பான உறுதிமொழிக் கடிதத்தை திங்கட்கிழமை (16)  தம்மிடம் கையளித்ததாக யாழ்.கடற்றொழில் நீரியல்வளத்துறை உதவிப் பணிப்பாளர் நடராசா கணேசமூர்த்தி  தெரிவித்தார்.

இந்நிலையில்,  பாவித்துவந்த ஒரு கோடி  ரூபா பெறுமதியான தங்கூசி வலைகளை மண்டைதீவு பகுதியில் இம்மீனவர்கள் தங்கள் முன்னிலையில் இன்றையதினம் (16) எரித்ததாகவும் அவர் கூறினார்.

இதேபோன்று, ஏனைய  மீனவர்களும் தடைசெய்யப்பட்ட மீன்பிடிமுறைகளை தாங்களாகவே கைவிட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
 
 




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X