2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

வியாபார நிலையத்தில் திருட்டு : அரிசி மூடையுடன் துவிச்சக்கரவண்டி மீட்பு

Kogilavani   / 2014 ஜூன் 16 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன்

யாழ்.வல்வெட்டித்துறை நெடியகாட்டுப் பகுதியிலுள்ள வியாபார நிலையத்தில் திங்கட்கிழமை (16) அதிகாலை இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்தில் 30 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலைய உபபொலிஸ் பரிசோதகர் எம்.எம்.ஈ.திஸ்ஸ் பண்டார தெரிவித்தார்.

மேற்படி வியாபார நிலையத்தின் கூரை வழியாக உள்நுழைந்த திருடர்கள் அங்கிருந்த 30 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்களை திருடிக் கொண்டு பின்பக்கக் கதவு வழியாகச் சென்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், திருட்டுக்கு பயன்படுத்திய துவிச்சக்கரவண்டியொன்றினையும், அதில் கட்டப்பட்டிருந்த இரண்டு அரிசி மூடைகளையும் மீட்டதாக  அவர் தெரிவித்தார்.

இதன்போது,  கடையிலிருந்த, பால்மாபெட்டிகள், சவர்காரங்கள், மண்ணெண்ணெய் மற்றும் அரிசி மூடைகள் திருடப்பட்டுள்ளன.

இதன்போது, அரிசி மூடைகளை துவிச்சக்கரவண்டியில் கட்டி வைத்துவிட்டு மிகுதிப் பொருட்களை கொண்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில் அதிகாலை 3 மணியளவில் கடலுக்குச் செல்வதற்காக அப்பகுதியினால் வந்த மீனவர்கள், துவிச்சக்கரவண்டியில் அரிசி மூடைகள் கட்டப்பட்டிருப்பதினை அவதானித்து உரிமையாளருக்கு விடயத்தினைத் தெரியப்படுத்தினர்.

உடனடியாக உரிமையாளர் வல்வெட்டித்துறைப் பொலிஸாரிற்கு தெரியப்படுத்தியதைத் தொடர்ந்து, பொலிஸார் அவ்விடத்திற்கு வந்து துவிச்சக்கரவண்டியினை மீட்டதுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X