2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

கச்சாயில் தங்கூசி வலைகள் மீட்பு

Suganthini Ratnam   / 2014 ஜூன் 17 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


-செல்வநாயகம் கபிலன் 


யாழ். சாவகச்சேரி, கச்சாய் கடற்பரப்பிலிருந்து  தடைசெய்யப்பட்ட  14 தங்கூசி வலைகளை செவ்வாய்க்கிழமை (17) காலை மீட்டதாக யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை பிரதிப் பணிப்பாளர் நடராசா கணேசமூர்த்தி தெரிவித்தார்.

மேற்படி கடற்பரப்பில் தங்கூசி வலைகளை பயன்படுத்தி மீன்பிடி மேற்கொள்ளப்படுவதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, அங்கு சென்று 500,000  ரூபா பெறுமதியான  இந்தத் தங்கூசி வலைகளை மீட்டதாகவும் அவர் கூறினார்.

மேலும், இந்தத் தங்கூசி வலைகளுக்கு  அங்குள்ள மீனவர்கள் எவரும் உரிமை கோரவில்லை.   வலைகளை சாவகச்சேரி நீதிமன்றத்தில் பாரப்படுத்தவுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், சாவகச்சேரி நீதிமன்றத்தில் முதன்முறையாக இவ்வாறான தடைசெய்யப்பட்ட வலைகள் பாரப்படுத்தவுள்ளதாக அவர்; தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .