2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரிகள் கலந்துரையாடல்

Kanagaraj   / 2014 ஜூன் 17 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-செல்வநாயகம் கபிலன்


யாழ்.  மாவட்டத்தின் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, 8 பொலிஸ் நிலையங்களின் போக்குவரத்துப் பொலிஸ் பொறுப்பதிகாரிகளுக்கிடையிலான கலந்துரையாடலொன்று வலி. கிழக்குப் பிரதேச சபையில் இன்று செவ்வாய்கிழமை (17) இடம்பெற்றது.

காங்கேசன்துறை பொலிஸ் பிரிவின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜி.ஆர்.டி.தேசப்பிரிய ஜெயதிலக தலைமையில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் ஒவ்வொரு பொலிஸ் பிரிவிலுமுள்ள போக்குவரத்து நடைமுறைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டது.

அதன்படி, நெல்லியடிப் பொலிஸ் பிரிவிலுள்ள வீதிகளில் மின்விளக்குகள் பொருத்தப்படவில்லையெனவும், பாடசாலைகளுக்கு முன்னாலுள்ள மஞ்சள் கோடுகள் அழிந்துள்ளதுடன், சில பாடசாலைகளுக்கு முன்னால் மஞ்சள் கோடுகள் கீறப்படவில்லையென நெல்லிடியப் போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி டபிள்யு.எச்.எம்.ஏ.டி.விஜயசிங்கவினால் எடுத்துக்கூறப்பட்டது.

அத்துடன், தமது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வசிக்கும் மக்கள் தாங்கள் பயன்படுத்தும் துவிச்சக்கரவண்டிகள் மற்றும் சிறிய ரக உழவு இயந்திரங்கள் ஆகியவற்றில் ஒளித்தெறிப்பு விளக்குகள் பொருத்தப்படாமையினால் விபத்துக்கள் இடம்பெறுவதாகச் சுட்டிக்காட்டினார்.

பருத்தித்துறைப் பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பொறுப்பதிகாரி கே.டபிள்யு.ஏ.சமரநாயக்கா கருத்துக்கூறுகையில், இலங்கை போக்குவரத்துச் சபை பேரூந்தும் தனியார் மினிபஸ்களும் போட்டி போட்டுக்கொண்டு செல்வதினால் விபத்துக்கள் ஏற்படுகின்றது எனவும், அவர்களது புறப்படும் நேரங்களை மாற்றியமைக்கும் படி தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சங்க பிரதிநிதிகளிடம் கோரிக்கை முன்வைத்தார்.

அச்சுவேலிப் பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பொலிஸ் பொறுப்பதிகாரி ஐ.ஜி.ஜெயதிலக பண்டா கருத்துக்கூறுகையில், தமது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் பாடசாலை மாணவர்களுக்கு போக்குவரத்துத் தொடர்பாக விழிப்புணர்வூட்டும் வகையில் 6 செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

அத்துடன்,; போக்குவரத்துப் பொலிஸ் பொறுப்பதிகாரிகள், மஞ்சள் கோடுகள் அமைக்கப்படவேண்டும் மற்றும் சாரதிகளின் கவனயீனங்களினால் விபத்துக்கள் ஏற்படுகின்றன என்பதனையும் சுட்டிக்காட்டினார்கள்.

இந்தக் கலந்துரையாடலில், பருத்தித்துறை, வல்வெட்டித்துறை, அச்சுவேலி, நெல்லியடி, தெல்லிப்பளை, இளவாலை, காங்கேசன்துறை, பலாலி, ஆகிய 8 பொலிஸ் நிலையங்களின் போக்குவரத்துப் பொலிஸ் பொறுப்பதிகாரிகளும், பிரதேச சபைகளின் உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X