2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

முதியோர் இல்லத்தினை மீள ஆரம்பிக்க நிதிவேண்டும்

Super User   / 2014 ஜூன் 17 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன்


கிளிநொச்சி வன்னேரிக்குளம் யோகர் சுவாமி திருவடி நிலைய முதியோர் இல்லத்தினை மீண்டும் ஆரம்பிப்பதற்கு 30 மில்லியன் ரூபா நிதி தேவைப்படுவதாக முதியோர் இல்லத் தலைவரும் முன்னாள் கிளிநொச்சி மாவட்ட செயலருமான பி.இராசநாயகம் இன்று செவ்வாய்க்கிழமை (17) தெரிவித்தார்.

மேற்படி முதியோர் இல்லத்தினை மீள ஆரம்பித்தால் கைவிடப்பட்ட நிலையில் அநாதரவாக இருக்கும் பல முதியோர்களை பாதுகாக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இது தொடர்பாக முதியோர் இல்லத் தலைவரைத் தொடர்புகொண்டு கேட்டபொழுதே அவர் மேற்கன்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இறுதி யுத்தத்திற்கு முன்னர் இந்த முதியோர் இல்லத்தில் 90 முதியோர் வரையில் வைத்துப் பராமரிக்கப்பட்டு வந்தனர். எனினும் மேற்படி முதியோர் இல்லத்தின் கட்டிடங்கள் யுத்தத்தினால் மோசமாக சேதமடைந்துள்ளன.

இதனால் முதியோர் இல்லத்தினை மீளவும் ஆரம்பிக்க முடியாதுள்ளது. மீள ஆரம்பிப்பதற்கு 30 மில்லியன் ரூபா நிதி தேவைப்படுகின்றது.

இது தொடர்பாக இலங்கை இந்து மாமன்றம், மாகாண சபை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் கொடையாளர்களிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
 
முதலில் ஆகக்குறைந்தது 2 மில்லியன் ரூபா நிதி கிடைக்கப்பெற்றால் முதியோர் இல்லத்திற்கு புத்துயிர் கொடுக்கமுடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .