2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

பணமோசடி செய்தவர் கைது

Kanagaraj   / 2014 ஜூன் 17 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி இரண்டு பெண்களிடம் 10 இலட்சம் ரூபாவை மோசடி செய்ததாக கூறப்படும், கனடா பிரஜாவுரிமை பெற்ற அச்சுவேலியை சேர்ந்த ஒருவரை இன்று செவ்வாய்க்கிழமை (17) கைது செய்ததாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர்.

அச்சுவேலி தோப்பு பகுதியினைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட இரு பெண்கள் கடந்த 12 ஆம் திகதி செய்த முறைப்பாட்டின் அடிப்படையில், என்.தயாசீலன் (48) என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்
.
இது பற்றித் தெரியவருவதாவது;

குறித்த பெண்களில் ஒருவர் தனது தந்தையை வெளிநாட்டிற்கு அனுப்புவதற்காக 2010 ஆம் ஆண்டு மேற்படி நபரின் வங்கிக் கணக்கில் 3 இலட்சம் ரூபா செலுத்தியதுடன், அவரிடம்; நேரடியாக வழங்கிய 2 இலட்சம் ரூபா பணத்துடன் சேர்த்து மொத்தம் 5 இலட்சம் ரூபா பணத்தினைக் கொடுத்துள்ளார்.

இரண்டாவது பெண், 2012 ஆம் ஆண்டு 11 ½ இலட்சம் ரூபா பணத்தினைக் குறித்த நபரிடம் கொடுத்துள்ளார்.
வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி ஏமாற்றுகின்றார் என உணர்ந்த இரண்டாவது பெண் தனது பணத்தினைத் திருப்பிக் கேட்டுள்ளார்.

இதனையடுத்து குறித்த நபர் 2013 ஆம் ஆண்டு குறித்த 6 ½ இலட்சம் ரூபா பணத்தினை திருப்பிக கொடுத்துள்ளார்.

எனினும், இரண்டாவது பெண்ணின் மிகுதிப் பணத்தினையும் முதற் பெண்ணின் பணத்தினையும் குறித்த நபர் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றியுள்ளார். இதனையடுத்து, குறித்த பெண்கள் கடந்த 12 ஆம் திகதி அச்சுவேலிப் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளனர்.

பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது, குறித்த நபர் தலைமறைவாகியிருந்த நிலையில் இன்று (17) தோப்பு பகுதியில் நடமாடுவதாகக் கிடைத்த தகவலினையடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .