2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

விபத்தில் படுகாயமடைந்த பூசகர் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2014 ஜூன் 18 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நா.நவரத்தினராசா

யாழ். புன்னாலைக்கட்டுவன் தெற்குச் சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த   மல்லாகத்தைச் சேர்ந்த வீனிவரை அம்மன்   (இராஜஇராஜேஸ்வரி) கோவில்  பிரதம பூசகரும் தர்மகர்த்தாவுமான அ.துரைச்சாமி குருக்கள் (வயது 83) என்பவர் செவ்வாய்க்கிழமை (17)  மாலை உயிரிழந்ததாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். 

செவ்வாய்க்கிழமை (17)  மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த  இப்பூசகர் மேற்படி சந்தியில் வீதியைக் கடக்க முற்பட்டபோது,   கன்டர் ரக வாகனமொன்றுடன் மோதுண்டுள்ளார்.

இவ்விபத்து தொடர்பில் விரிவான விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 
 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .