2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

கருங்கல் அகழ்வை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு பணிப்பு

Kogilavani   / 2014 ஜூன் 18 , மு.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.றொசாந்த்


தென்னிலங்கை கட்டுமான நிறுவனமொன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் பன்றிவெட்டி பிரதேசத்தில் மேற்கொண்டு வரும் கருங்கல் அகழ்வு அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேலதிகமாக காணப்படுமாயின் குறித்த அகழ்வினை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்  பணிப்புரை விடுத்தார்.

மேற்படி பகுதியில் அனுமதிகப்பட்டதற்கு மேலதிகமாக கருங்கல் அகழப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலினை தொடர்ந்து வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வடமாகாண சுற்றுச் சூழல் அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் ஆகியோர் செவ்வாய்க்கிழமை (17) நேரில் சென்று பார்வையிட்டனர். இதன்போதே வடமாகாண முதலமைச்சர் இவ்வாறு பணிப்புரை விடுத்தார்.

குறித்த பகுதியில் 12 மீற்றர் ஆழத்திற்கு மட்டுமே கல் அகழ்வதற்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கும் நிலையில் அகழ்வில் ஈடுபடும் நிறுவனம் 16 மீற்றர் ஆழத்திற்கு நீர் ஊற்று வரும் வரையில் கருங்கற்களை அகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இவ்வாறான கருங்கல் மற்றும் மணல் குவாறிகளை வடமாகாணத்தைச் சேர்ந்த தமிழ் கட்டுமான நிறுவனங்களுக்கு ஏன் வழங்கப்படவில்லையென ஆராயும்படியும் முதலமைச்சர் கோரியுள்ளார்.  

இதன்போது, 'கல் அகழப்பட்ட குழியில் மீன் வளர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என கல் அகழ்வில் ஈடுபடும் கட்டுமான நிறுவனம் கூறியிருந்தது. எனினும் அவ்வாறு செய்ய முடியாது எனவும் கல் அகழ்ந்த குழியினை மூடிவிடவேண்டும் எனவும் வடமாகாண  விவசாய அமைச்சர் குறித்த நிறுவனப் பிரதிநிதிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்

இதன்போது, துணுக்காய் பிரதேச செயலர் எஸ்.குணபாலன், வடமாகாணக் கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா ஆகியோர் உடனிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X