2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஊர்காவற்றுறை தவிசாளரின் வாகனம் பறிமுதல்; ஓட்டுநருக்கு பிணை

Menaka Mookandi   / 2014 ஜூன் 18 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

ஊர்காவற்றுறை பிரதேச சபைத் தவிசாளருடைய வாகனத்தினை, சாரதி அனுமதிப்பத்திரம் உள்ளிட்ட எதுவித ஆவணங்களுமில்லாமல் மதுபோதையில் செலுத்திச் சென்றவரை 50,000 ரூபா சரீரப் பிணையில் செல்லவும், குறித்த வாகனத்தினைப் பறிமுதல் செய்யவும் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் இ.சபேசன் செவ்வாய்க்கிழமை (17) உத்தரவிட்டார்.

ஊர்காவற்றுறையில் வீதிப் போக்குவரத்துக் கடமையில் ஈடுபட்டிருந்த ஊர்காவற்றுறைப் பொலிஸார், தவிசாளரின் வாகனத்தினைச் செலுத்திச் சென்ற மேற்படி நபரினை கடந்த வெள்ளிக்கிழமை (13)  இரவு கைது செய்திருந்தனர்.

தொடர்ந்து ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் குறித்த நபருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்து, சந்தேகநபரை மன்றில் ஆஜர்படுத்திய போதே பதில் நீதவான் மேற்படி உத்தரவினைப் பிறப்பித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .