2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

'இந்திய மீனவர்களின் அத்துமீறல் குறைக்கப்படுகின்றது'

Suganthini Ratnam   / 2014 ஜூன் 18 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

இலங்கை கடற்பரப்பினுள் இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைவது தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நடவடிக்கையால் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகின்றதென யாழ். இந்திய துணைத்தூதரக கொன்சல் எஸ்.டி.மூர்த்தி தெரிவித்துள்ளதாக முற்போக்கு தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் சுதர்சிங் விஜயகாந்த் தெரிவித்தார்.

முற்போக்கு தமிழ்த்; தேசியக் கட்சியின் ஏற்பாட்டில், கைலாசபிள்ளையார் ஆலயத்திலிருந்து  யாழ். இந்திய துணைத்தூதரகம்வரை பேரணி    புதன்கிழமை (18) நடைபெற்றது.  இப்பேரணி முடிவில் எஸ்.டி.மூர்த்தியிடம் மகஜரை  கையளித்ததுடன்,  கலந்துரையாடலும் நடைபெற்றது.

இதன்போதே எஸ்.டி.மூர்த்தி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்திய வீட்டுத்திட்டத்தில் வீடுகளின் எண்ணிக்கையை அதிகரித்தல், இந்திய மீனவர்களின் அத்துமீறலை கட்டுப்படுத்தல் மற்றும் 13ஆவது திருத்தச்சட்டத்தை அமுல் செய்தல்  தொடர்பில் இந்தியப் பிரதமர் தாமோதரதாஸ் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரி இப்பேரணி நடத்தப்பட்டது.

இது தொடர்பில் சுதர்சிங் விஜயகாந்த் மேலும் தெரிவிக்கையில்,

'தமிழக மீனவர்கள் ஆழ்கடலுக்குச் சென்று மீன்பிடியில் ஈடுபடுவதற்கு ஏதுவான வசதிகளை தமிழக முதலமைச்சர் செய்து கொடுத்து வருகின்றார். இதனால், இந்திய மீனவர்களின் அத்துமீறல் படிப்படியாக குறைவடையுமென  எஸ்.டி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.

மேலும், இந்திய வீட்டுத்திட்டத்தில் கோரிய மேலதிகமாக 10,000 வீடுகள் தொடர்பில் இந்தியாவின் புதிய அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தி நடவடிக்கை எடுத்துத் தருவதாகவும் அதற்கு எங்கெங்கு எவ்வளவு வீடுகள் வேண்டுமென்ற அறிக்கை தயாரித்துத் தருமாறு என்னிடம் கோரப்பட்டது. 

இந்திய வீட்டுத்திட்டம்  பணக்காரர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதை  அவர் ஏற்றுக்கொண்டுள்ளதுடன், இந்திய வீட்டுத்திட்டப் பயனாளிகளை இலங்கை அரசாங்கமே தெரிவுசெய்ததாக  எஸ்.டி.மூர்த்தி கூறியுள்ளார்' என்றார்.

13ஆவது திருத்தச்சட்டத்திலுள்ள அதிகாரங்கள் போதாதெனக் கூறிய நிலையில், ஏன் நீங்கள் 13ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்தக் கேட்கின்றீர்களென மூர்த்தி என்னிடம் வினாவினார்;.

இதற்கு 'தற்போது கிடைக்கின்ற அதிகாரங்களை வைத்து முதல்படியை மேற்கொள்வோமென்றும் தொடர்ந்து மற்றவை   பற்றிச் சிந்திப்போம்'  என்றும் மூர்த்திக்கு  தான் தெரிவித்ததாக  சுதர்சிங் விஜயகாந்த் மேலும் தெரிவித்தார்.
 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .