2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

யாழ்.பல்கலைக்கழகத்திலும் கண்டனப் போராட்டம்

Kogilavani   / 2014 ஜூன் 18 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

அளுத்கம, தர்காநகர், பேருவளை ஆகிய இடங்களில் முஸ்லிம்;களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் மற்றும் தாக்குதல்களைக் கண்டித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை (19) பகல் 12 மணி முதல் 1 மணிவரையும் கண்டனப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், கல்விசார ஊழியர்கள், மற்றும் மாணவர்கள் இணைந்து கண்டனப் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளனர்.

பல்கலைக்கழக பிரதான வாயிலில் இடம்பெறவுள்ள இந்தப் போராட்டத்தில், முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனவிரோதச் செயற்பாடுகள், உயிர்கள் பறிக்கப்பட்டமை, சொத்துக்கள் நாசமாக்கப்பட்டமை போன்றவற்றிற்கு எதிராகக் குரல் கொடுக்கவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .