2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

பொலிஸ் அதிகாரியை தாக்க முற்பட்டவருக்குத் தண்டம்

Kanagaraj   / 2014 ஜூன் 18 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்

யாழ்.கச்சாய்ப் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்பவர்களை கைது செய்வதற்காக சென்ற கொடிகாமம் பொலிஸ் அதிகாரி ஒருவரை தாக்க முற்பட்டதாக கூறப்படும் நபருக்கு ரூ.50,000 தண்டம் விதித்து சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரம் புதன்கிழமை (18) உத்தரவிட்டுள்ளார்.

மேற்படி கைது செய்யப்பட்ட நபருடன் கூடிய கும்பல் கடந்த திங்கட்கிழமை (16) கச்சாய்ப் பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்ந்து கொண்டிருந்த நிலையில், கொடிகாமம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து அவர்களைக் கைது செய்வதற்காக சென்றுள்ளனர்.

சம்பவத்தின் போது குறித்த கும்பலில் இருந்த அனைவரும் தப்பியோடியதாகவும் ஒருவரை மாத்திரமே பொலிஸாரால் கைது செய்ய முடிந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போதே கைது செய்யப்பட்ட நபர் குறித்த பொலிஸை தாக்க முற்பட்டுள்ளார்.

இதனையடுத்து மேற்படி நபருக்கு எதிராக, பொலிஸாரின் கடமையை செய்யவிடாமல் தடுத்தமை மற்றும் சட்டவிரோதமாக மணல் அகழ்ந்தமை ஆகிய இரண்டு வழக்குகளை சாவகச்சேரி நீதிமன்றத்தில் கொடிகாமம் பொலிஸார் பதிவு செய்திருந்தனர்.

அதற்கமையவே மேற்படி தீர்ப்பு வழங்கப்பட்டதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .