2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

முள்ளியவளை சந்தைக்கு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படுகின்றன

Kogilavani   / 2014 ஜூன் 19 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு முள்ளியவளைப் பொதுச்சந்தைக்குத் தேவையான அடிப்படை வசதிகள் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக கரைத்துறைப்பற்றுப் பிரதேச சபைச் செயலாளர் சு.இரவீந்திரன்  வியாழக்கிழமை (19) தெரிவித்தார்.

முள்ளியவளைச் சந்தையில் அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தினால் தாங்கள் சிரமங்களை எதிர்நோக்குவதாக சந்தை வியாபாரிகள் ஆட்சேபனை தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இது தொடர்பாக செயலாளரிடம் தொடர்புகொண்டு கேட்டபொழுதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கூறுகையில்,

'இறுதி யுத்தத்தில் முழுமையாக சேதமடைந்த முள்ளியவளைச் சந்தையானது 4.4 மில்லியன் ரூபா செலவில் மீண்டும் அமைக்கப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் திறந்து வைக்கப்பட்டது. தொடர்ந்து சந்தைக்குத் தேவையான குடிநீர் மற்றும் மலசலகூட வசதிகள் பிரதேச சபையினால் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில் சந்தைக்கான மின்சாரம் இன்மை மற்றும் மழை காலத்தில் தூவனம் படுதல் போன்ற குறைகள் மட்டும் காணப்படுகின்றன.
இருந்தும், அவற்றினை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். அதன்போது, சந்தையின் அடிப்படைத் தேவைகள் முழுமையடையும்.

மரக்கறி மீன், மற்றும் இறைச்சி வியாபாரிகளுக்கு மட்டுமல்லாது, வெற்றிலை வியாபாரம் போன்ற சிறுவியாபாரிகளுக்கும் சிறிய கடைகளை அமைத்துக் கொடுக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது' என அவர் மேலும் தெரிவித்தார்.  

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .