2025 ஜூலை 02, புதன்கிழமை

மத வன்முறைகளை தடுக்கக் கோரி சர்வமத பிரார்தனை

Kogilavani   / 2014 ஜூன் 19 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


நவரத்தினம் கபில்நாத்


இன, மத ரீதியாக ஏற்பட்டும் வன்முறைகளை தடுத்து ஒற்றுமையாக வாழவேண்டும் என வலியுறுத்தி சர்வமதப் பிரார்த்தனையும் மதத்தலைவர்களுக்கான ஆலோசனைக் கூட்டமும் வவுனியா பொலிஸ் நிலையத்தில் வியாழக்கிழமை(19) இடம்பெற்றது.

வவுனியா சிவில் பாதுகாப்புக் குழுவின் ஆலோசனை சபையும் பொலிஸ் அதிகாரிகளும் இணைந்து இவ் வழிபாட்டிலும் ஆலோசனைக் கூட்டத்திலும் ஈடுபட்டனர்.

அளுத்கம, பேருவளை ஆகிய பிரதேசங்களில் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறைச் சம்பவத்தையடுத்து வவுனியாவில் வியாழக்கிழமை(19) ஹார்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வவுனியா நகரில் முஸலிம் மக்கள் சிலர் ஒன்று கூடியிருந்தனர். இதனையடுத்து வவுனியாவில் ஏற்பட்ட பதற்றத்தையடுத்து மூவின மக்களுக்கிடையிலும் ஒற்றுமையை ஏற்படுத்தி சாந்தி சமாதானமாக வாழ விசேட பிரார்த்தனை இடம்பெற்றது.

இதன்போது மதத்தலைவர்களும் கலந்துகொண்டு தமது மத மக்களை அமைதி பேணுமாறும் வலியுறுத்தினர். வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அனுதாபம் தெரிவித்து அவர்களுக்கான பிரார்த்தனையும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், வவுனியா தலதா விகாரை ஆனந்த தேரர், நகர பள்ளிவாசல் மதகுரு அப்துல் சித்திக், இறம்பைக்குளம் தேவாலய மதகுரு என். சத்தியலிங்கம், வவுனியா நாகபூசனி தேவஸ்தான குரு வாசுதேவ சர்மா, வவுனியா உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சுஜித்வெதமுன, வவுனியா பொலிஸ் நிலைய தலைமைப் பொறுப்பதிகாரி சன்அபேயவர்த்தன ஆகியோர் கலந்துகொண்டனர்

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .