2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

நீரில் மூழ்கி வயோதிபர் பலி

Suganthini Ratnam   / 2014 ஜூன் 22 , மு.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். வேலணை சாட்டிக் கடலில் குளித்துக்கொண்டிருந்தபோது  சுழியில் அகப்பட்டதால்   நீரில் மூழ்கி  ஓட்டுமடத்தைச்  சேர்ந்த விசுவலிங்கம் நடராசா (வயது 84) என்பவர்  சனிக்கிழமை (21) மாலை உயிரிழந்ததாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் தனது குடும்பத்துடன்; கடலில் குளித்துக்கொண்டிருந்தபோதே  இந்த அசம்பாவிதத்துக்கு  உள்ளாகியதாகவும் பொலிஸார் கூறினர்.

இது இவ்வாறிருக்க குறித்த கடலில் குளிப்பதற்கு வருபவர்களின் பாதுகாப்புக் கருதி குளிப்பதற்கான எல்லைக்கோடு வேலணை பிரதேச சபையால் போடப்பட்டு, அறிவுரைகளும்  வழங்கப்படுகின்றன. இருப்பினும், இதை சிலர் செவிமடுப்பதில்லையென வேலணை பிரதேச சபையின் சாட்டிக் கடற்கரை கண்காணிப்பு பணியாளர்  தெரிவித்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .