2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

யாழில். பட்டம் விடும் போட்டி

Super User   / 2014 ஜூன் 22 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.றொசாந்த்


வடமாகாண ஆளுநர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் யாழ். மாவட்ட பட்டம் விடும் போட்டியாளர்களுக்கிடையிலான திறந்த போட்டி, யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று சனிக்கிழமை (21) நடைபெற்றது.

இந்தப் பட்டம் விடும் போட்டியினை வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி ஆரம்பித்து வைத்தார்.

இதில், வல்வெட்டித்துறையைச்; சேர்ந்த 55 போட்டியாளர்களும் யாழ்ப்பாணம் அரியாலையினைச் சேர்ந்த 5 போட்டியாளர்களுமாக 60 போட்டியாளர்கள் பங்குபற்றினர்.

இதில் சிவானந்தன் உலகராஜா உருவாக்கிய ட்ராகன் வடிவப் பட்டம் முதலிடத்தையும், ராஜேந்திரம் கிருஸ்ணானந்தன் உருவாக்கிய ரோபோ வடிவப் பட்டம் இரண்டாமிடத்தையும் வைத்திலிங்கம் மகேந்திரம் உருவாக்கிய வான் வடிவப் பட்டம் மூன்றாமிடத்தையும் பெற்றன.

இந்த போட்டியில் வல்வெட்டித்துறையைச்; சேர்ந்த துரைராசா நவரட்ணம் என்ற 94 வயது வயோபதிபர் வேல் வடிவப் பட்டம் ஒன்றினை உருவாக்கிப் பறக்கவிட்டார்.

குறித்த போட்டியில் வயோபதிபரின் பட்டம் 8ஆம் இடத்தினைப் பெற்ற போதும், அவருடைய திறனைப் பாராட்டும் முகமாக வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி சிறப்புப் பரிசிலினையும் இதன்போது வழங்கினார்.

இவ்வாறான போட்டிகள் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் யாழ்ப்பாணத்தில் யாழ்ப்பாண மாநகர சபையினால் நடத்தப்படவேண்டும் என வடமாகாண ஆளுநர், யாழ். மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசாவிடம் கேட்டுக்கொண்டார்.

அதற்கு மாநகர முதல்வர், வருடாந்தம் நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதாக உறுதியளித்தார்.








  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .