2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

கமநல சேவை நிலையம் மீண்டும் சொந்தக் கட்டிடத்தில்

Kanagaraj   / 2014 ஜூன் 22 , பி.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கனகரத்தினம் கனகராஜ்


வவுனியா வடக்கு கனகராயன்குளம் கமநல சேவை நிலையத்தின் நிரந்தரக் கட்டடம் நாளை திங்கட்கிழமை (23) ஒப்படைக்கப்படுமென கனகராயன் குளம் பொலிஸார் தெரிவித்ததாக, கனகராயன் குளம் கமநல சேவை நிலையத்தின் பெரும்பாக உத்தியோகத்தர் பி.யூட்ஆனந்தகுமார் இன்று ஞாயிற்றுக்கிழமை (22) தெரிவித்தார்.

2009ஆம் ஆண்டு இறுதி யுத்தம் முடிவடைந்த பின்னர், கனகராஜன்குளம் பகுதியில் அவ்வாண்டு டிசம்பர் மாதம் மக்கள் மீள்குடியேற்றப்பட்டனர்.
இதன்போது, கமநல சேவை நிலையம் அமைந்திருந்த கட்டித்தில் கனகராஜன் குளம் பொலிஸ் நிலையம் இயங்க ஆரம்பித்தது.

தொடர்ந்து 2011ஆம் ஆண்டு முதல் கனகராஜன் குளம் கமநல சேவை நிலையத்தின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்ட போதும், அவர்களின் கட்டிடத்தில் பொலிஸ் நிலையம் அமைந்திருந்தமையினால், அதற்கு முன்னாலுள்ள காணியொன்றில் தற்காலிகமாக நிலையம் அமைத்து இதுவரையில் இயங்கி வந்தனர்.

இதன்போது, விவசாயிகளுக்கு சிறந்த சேவையினை வழங்க முடியாத நிலை கமநலசேவை நிலையத்திற்குக் காணப்பட்டது.
இந்நிலையில் கனகராயன் குளம் பொலிஸ் நிலையத்திற்கான நிரந்தரக் கட்டிடம் பெரியகுளம் பகுதியில் அமைக்கப்பட்டு முடிவுக் கட்டத்தை எட்டியுள்ளது.

இதனால் இது வரைகாலமும் பொலிஸ் நிலையம் காணப்பட்ட கமநல சேவைகள் நிலையக் கட்டடத்தினை நாளை திங்கட்கிழமை (23) உத்தியோகபூர்வமாக கமநல சேவை நிலையத்தினரிடம் ஒப்படைப்பதற்கு கனகராயன்குளம் பொலிஸார் முன்வந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .