2025 ஜூலை 02, புதன்கிழமை

கஞ்சா வைத்திருந்தவர்களுக்குப் சரீரப் பிணை

Kogilavani   / 2014 ஜூன் 23 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி நகர்ப்பகுதியில் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட மூவரையும் தலா 25 ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் செல்ல கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற எம்.ஐ.வகாப்தீன் திங்கட்கிழமை (23) உத்தரவிட்டார்.

கிளிநொச்சி நகர்ப்பகுதியில் வைத்து ஞாயிற்றுக்கிழமை (22) மேற்படி நபர்கள் கிளிநொச்சி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டதுடன், அவர்களிடமிருந்து 9 மில்லி கிராம் கஞ்சா பக்கற்றுக்கள் மூன்று மற்றும் கஞ்சா பீடி மூன்றும் கைப்பற்றப்பட்டது.

தொடர்ந்து மேற்படி நபர்களுக்கு எதிராக கிளிநொச்சி பொலிஸார், கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் திங்கட்கிழமை (23) வழக்குத் தாக்கல் செய்தபோதே, குறித்த நபர்கள் தாங்கள் சுற்றவாளிகள் என மன்றில் தெரிவித்தனர்.

இதனையடுத்து குறித்த நபர்களை சரீரப் பிணையில் விடுவித்த நீதவான் வழக்கினை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 3 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .