2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

கணவனை இழந்த பெண்களுக்காள சுயதொழில் முயற்சி செயலமர்வு

Super User   / 2014 ஜூன் 23 , பி.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


-செல்வநாயகம் கபிலன்


யாழ். மாவட்ட இராணுவத்தின் மயிலிட்டி, 7 ஆவது மகளிர் படையணியின் ஏற்பாட்டில் கணவனை இழந்த பெண்கள், சுயதொழில் கைப்பணி வேலைகளில் ஈடுபடுதல் தொடர்பான செயலமர்வொன்று வசாவிளான் மத்திய மகா வித்தியாலயத்தில் இன்று திங்கட்கிழமை (23) இடம்பெற்றது.

உலக விதவைகள் தினம் இன்று திங்கட்கிழமை (23) உலகளாவிய ரீதியில் நினைவு கோருவதினை முன்னிட்டு இந்த செயலமர்வு ஒழுங்கு செய்யப்பட்டது.

இந்தச் செயலமர்வினை 7 ஆவது மகளிர் படையணியின் மேஜர் சந்திரிகா ராஜகுரு நடத்தினார்.

இந்தச் செயலமர்வில் தமிழ் மற்றும் சிங்கள விதவைப் பெண்கள் என 68 பேர் பங்குபற்றியிருந்தனர்.
 
இவர்களுக்கான சுயதொழில் ஊக்குவிப்புத் தொகைகளும் விரைவில் வழங்கப்படுமென சந்திரிகா இதன்போது தெரிவித்தார்.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .