2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

யாழ். – கொழும்பு பேருந்து மீது தாக்குல்

Kanagaraj   / 2014 ஜூன் 23 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கி.பகவான்

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து மீது பளைப் பகுதியில் வைத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) இரவு 9 மணியளவில் இனந்தெரியாத நபர்கள் கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக பளைப் பொலிஸார் இன்று திங்கட்கிழமை (23) தெரிவித்தனர்.

இதனால் பேருந்தின் பின்பக்கக் கண்ணாடிகள் சேதமடைந்ததாகவும் சம்பவம் தொடர்பாக பேருந்து உரிமையாளர் பளைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டைப் பதிவு செய்த பின்னர் பயணத்தைத் தொடர்ந்ததாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கடந்த காலங்களில் அநுராதபுரம், மதவாச்சி உள்ளிட்ட இடங்களில் யாழ்;ப்பாணம் - கொழும்பு பேருந்துகள் மீது மேற்கொள்ளப்பட்ட கல்வீச்சுத் தாக்குதல் தற்போது யாழ்ப்பாணத்திலும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .