2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

ஆணொருவரின் சடலம் கரையொதுங்கியது

Kogilavani   / 2014 ஜூன் 24 , மு.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ற.றஜீவன், செல்வநாயகம் கபிலன்


யாழ்.தும்பளை கிழக்கு (மூர்க்கம்) கடற்கரையிலிருந்து ஆணொருவரின் சடலம்  செவ்வாய்க்கிழமை (24) அதிகாலை கரையொதுங்கியுள்ளதாக பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

தும்பளையினைச் சேர்ந்த முருகேசுப்பிள்ளை நிமல்ராஜ் (28) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

அதிகாலை வேளையில் தொழிலுக்குச் சென்றவர்கள் கடற்கரையில் சடலமொன்று கரையொதுங்கியிருப்பதாக தகவல் தெரிவித்தமையினையடுத்தே குறித்த சடலம் மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகப் பொலிஸார் மேலும் கூறினார்கள்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .