2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

வியாபாரத்தில் ஈடுபட்ட இந்தியர் இருவருக்கு தண்டம்

Kanagaraj   / 2014 ஜூன் 24 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா விசாவில் வந்து தெல்லிப்பழை பகுதியில் புடவை வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (15) கைது செய்யப்பட்ட தாய் மற்றும் மகனுக்கு, தலா 2500 ரூபா அபராதம் விதித்து மல்லாகம் நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ஜோய்மகிழ் மகாதேவா திங்கட்கிழமை (23) உத்தரவிட்டார்.

மேலும் குறித்த இருவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட புடவைகள் அடங்கிய 3 பயணப் பைகளை அரசுடமையாக்கும்படியும், அவர்கள் இருவரையும் எதிர்வரும் ஜுலை மாதம் 8 ஆம் திகதிக்கு முன்னர் நாட்டை விட்டு வெளியேறுமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

இந்தியா, தமிழ்நாடு இராமநாதபுரத்தினை சேர்ந்த அழகர்சாமி ராஜாஅம்பாள் (44), அழகர்சாமி மகேந்திரன் (23) ஆகியோர் புடவை விற்பனையில் ஈடுபட்டிருந்த நிலையில் கடந்த 15 ஆம் திகதி தெல்லிப்பளை பேருந்து நிலையத்தில் வைத்துத் தெல்லிப்பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

தொடர்ந்து, அவர்களை கடந்த திங்கட்கிழமை (16) மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போது, நீதவான் அவர்களை நேற்று (23) வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .