2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

இரும்பு திருடியவர்கள் கைது

Kanagaraj   / 2014 ஜூன் 24 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம்

யாழ்.சிறுப்பிட்டிப் பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்த இரும்புகளைத் திருடி நீர்வேலியிலுள்ள இரும்புக் கடையொன்றிற்கு விற்பனை செய்ய முயன்றதாக கூறப்படும் இருவரை திங்கட்கிழமை (23) கைது செய்ததாக அச்சுவேலி குற்றத் தடுப்புப் பொலிஸ் பொறுப்பதிகாரி கே.என்.சி. பிரதீப் செனவிரட்ண செவ்வாய்க்கிழமை (24) தெரிவித்தார்.

புத்தூர் கலைமகள் வீதியினைச் சேர்ந்த 25 மற்றும் 19 வயதுடைய நபர்களே மேற்படி கைது செய்யப்பட்டனர்.

இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .