2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தினை அரசியலாக்கவேண்டாம்: சிவஞானம்

Kanagaraj   / 2014 ஜூன் 24 , பி.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.றொசாந்த்

மே.18 முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தினை அரசியலாக்கும் செயற்பாட்டில் எவரும் ஈடுபடமுடியாது என வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் இன்று (24) தெரிவித்தார்.

வடமாகாண அவைத் தலைவரின் ஏற்பாட்டில் கைதடியிலுள்ள வடமாகாண சபைக் கட்டிடத் தொகுதியில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று செவ்வாய்க்கிழமை (24) இடம்பெற்றது.

இதன்போது கருத்துக் கூறுகையிலே அவைத்தலைவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

மே.18 என்பது ஒரு புனிதமான தினம். அதனை புனிதமான முறையில் கொண்டாடவேண்டும் என்பதுடன், அந்த தினத்தில் மட்டும் கொண்டாடப்படவேண்டும். மே 22 ஆம் திகதி இடம்பெற்ற வடமாகாண சபை அமர்வில் கறுப்புப் பட்டி அணிவது தொடர்பிலே எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சியினரால் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும், அன்றைய தினம் தீபம் ஏற்றப்பட்டு அனுஷ;டிக்கப்பட்டது. தீர்மானிக்கப்பட்டபடி நடைபெறாமையினாலேயே நான் தீபமேற்றி அஞ்சலி செலுத்தும் போது கலந்துகொள்ளவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .