2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

திருப்பெருந்துறை திண்மக் கழிவு முகாமைத்துவ நிலையத்திற்கு ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் விஜயம்

Menaka Mookandi   / 2014 ஜூன் 25 , மு.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன், எஸ்.பாக்கியநாதன்

மட்டக்களப்பு, திருப்பெருந்துறை திண்மக் கழிவு முகாமைத்துவ நிலையத்திற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டேவிட் டாலி இன்று புதன்கிழமை (25) விஜயம் செய்தார்.

திருப்பெருந்துறையில் சேகரிக்கப்படும் குப்பைகளிலிருந்து வெளிவரும் துர்நாற்றம் இப்பகுதியையொட்டி வசிக்கும் குடியிருப்பாளர்களின் சுகாதாரப் பிரச்சினையாக உள்ளதாக மாநகர சபைக்கு முறையிட்டுள்ளனர்.

இதற்குத் தீர்வு காணும் முகமாக இக்குப்பை மேட்டை மண்ணிட்டு மூடிவிடும் செயல் திட்டத்ததை தூதுவரிடம் முன்வைத்துள்ளதாக மாநகர ஆணையாளர் மா. உதயகுமார் தெரிவித்தார்.

அத்தோடு இந்நிலையத்தினால் உற்பத்தி செய்யப்படும் சேதனப் பசளைகளை விரிவான முறையில் செய்வதற்கான செயல் திட்டத்ததையும் முன்மொழிந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஐரோப்பிய யூனியன் செயல்திட்ட அதிகாரிகள், மாநகர சபையின் பொறியியலாளர் பி.அச்சுதன், உதவி ஆணையாளர் என். தனஞ்செயன் உட்பட மாநகர சபையின் நிர்வாக உத்தியோகஸ்தர்கள் கலந்துகொண்டு திண்மக் கழிவு முகாமைத்துவ பகுதியைப் பார்வையிட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .