2025 ஜூலை 02, புதன்கிழமை

யாழில் வெடிபொருட்கள் மீட்பு

Kogilavani   / 2014 ஜூன் 25 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்.கொடிகாமம் கெற்பேலிக் காட்டுப் பகுதியிலிருந்து ஒரு தொகுதி வெடிபொருட்கள் புதன்கிழமை (25) காலை மீட்கப்பட்டதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, 5 கைக்குண்டுகள்,   எஸ்.எவ்.ஜி.வெடிகுண்டு ஒன்று,   மகசின் ஒன்று மற்றும் 350 இற்கும் மேற்பட்ட துப்பாக்கி ரவைகள் என்பன மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் விறகு எடுக்கச் சென்றவர்கள் தமக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில், இராணுவத்தினரின் குண்டு செயலிழக்கும் பிரிவினருடன் சென்று குறித்த வெடிபொருட்களை மீட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .