2025 ஜூலை 02, புதன்கிழமை

மாடு வெட்டிய அறுவருக்கு அபராதம்

Suganthini Ratnam   / 2014 ஜூன் 25 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். மாசிப்பிட்டி, கொம்பனிக்குளம் பகுதியில் சட்டவிரோதமாக  இறைச்சிக்கு  மாடு ஒன்றை வெட்டிய 06 பேருக்கு தலா  4,000 ரூபா படி  மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் சி.சதீஸ்தரன் இன்று புதன்கிழமை (25) அபராதம் விதித்தார்.

அத்துடன், இவர்களிடமிருந்து கைப்பற்றிய மாட்டிறைச்சியை புதைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

குறித்த பகுதியில் மேற்படி 06 பேரும் புதன்கிழமை (25) அதிகாலை  சட்டவிரோதமாக இறைச்சிக்கு  மாடு ஒன்றை வெட்டியுள்ளனர்.  இது தொடர்பில் அறிந்த மானிப்பாய் பொலிஸார், குறித்த இடத்திற்குச்  சென்று  மேற்படி இவர்களை கைதுசெய்தனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .