2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

விவசாய அலுவலகம் திறப்பு விழா

Kogilavani   / 2014 ஜூன் 25 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


-செல்வநாயகம் கபிலன்


வடமாகாண விவசாய, கமநல சேவைகள் அமைச்சினால் விவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் யாழ்.மாவட்ட செயலகத்திற்கு அண்மையில் அமைக்கப்பட்ட விவசாய அலுவலகம் செவ்வாய்க்கிழமை (24) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

விவசாய அமைச்சின் ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கீட்டின் கீழ் அமைக்கப்பட்டுள்ள இவ்வலுவலகத்தினை வடமாகாண சபை உறுப்பினர் இமானுவல் ஆனோல்ட் திறந்து வைத்தார்.

பசுமையான எதிர்காலத்தினை உருவாக்குவோம் என்ற கருப்பொருளின் கீழ் அமைக்கப்பட்டுள்ள இவ்வலுவலகத்தில் விவசாயிகளின் பொருளாதாரம் மற்றும் விவசாய வளங்களை வளப்படுத்துதல் தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதுடன், விவசாயிகளுக்கான கடன்களும் வழங்கப்படவுள்ளதாகவும் வடமாகாண விவசாய அமைச்சு தெரிவித்தது.

இத்திறப்பு விழாவின் போது விவசாய அமைச்சின் அதிகாரிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .