2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

யாழில் கைக்குண்டு மீட்பு

Kogilavani   / 2014 ஜூன் 26 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-செல்வநாயகம் கபிலன்


யாழ்.அச்சுவேலி ஆவரங்கால் பிரதான வீதியிலுள்ள பேருந்து தரிப்பில் இருந்து கைக்குண்டு ஒன்று வியாழக்கிழமை (26) காலை மீட்கப்பட்டு 521 ஆவது படைப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர்.

பேருந்து தரிப்பில் கைக்குண்டு இருப்பதனை அவதானித்த பொதுமக்கள், ஜே - 286 கிராம அலுவலருக்கு அறிவித்ததையடுத்து, கிராம அலுவலர் அச்சுவேலிப் பொலிஸாருக்கு இவ்விடயம் தொடர்பாக அறிவித்துள்ளார்.

'ஆயுதங்களை தம்வசம் வைத்திருப்பவர்கள் அதனை உடனடியாக அருகிலுள்ள இராணுவ முகாமிலோ அல்லது பொலிஸ் நிலையத்திலோ ஒப்படைக்க வேண்டும்' என்று அண்மையில் இராணுவத்தினரால் ஒட்டப்பட்ட துண்டுப்பிரசுரத்தின் கீழ் இந்தக் கைக்குண்டு கண்டெடுக்கப்பட்டதாகப் பொலிஸார் மேலும் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .