2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

சபையின் நடுவில் அமர்ந்து சிவாஜிலிங்கம் போராட்டம்

Kogilavani   / 2014 ஜூன் 26 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

வடமாகாண சபையில் தனது பிரேரணைகள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லையென வடமாகாண சபை உறுப்பினர் சபையின் நடுவில் அமர்ந்திருந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியிலுள்ள வடமாகாண சபைக் கட்டிடத் தொகுதியில் வியாழக்கிழமை (26) இடம்பெற்றது.
இதன்போதே சிவாஜிலிங்கம் போராட்டத்தில் ஈடுபட்டார்.

சபைக்கு கறுப்பு மேலாடையுடன் வருகை தந்த சிவாஜிலிங்கம், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் தன்னால் முன்வைக்கப்பட்ட 3 பிரேரணைகள் இன்னமும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லையெனக் கூறி சபையின் நடுவில் உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

இந்நிலையில் தர்மலிங்கம் சித்தார்த்தன், சிவாஜிலிங்கத்தினைச் சமாதானம் செய்து இருக்கையில் அமரச் செய்தார்.

இதற்போது கருத்துத் தெரிவித்த அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், சிவாஜிலிங்கத்தின் குறித்த பிரேரணைகள் கட்சியுடன் தொடர்புடையதாக இருக்கின்றது எனவும், ஆகவே கட்சியின் முடிவு தெரிவிக்கப்பட்டதும் அடுத்த கூட்டத்தில் விவாதத்தில் சேர்க்கப்படும்' என தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .