2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

விபத்தில் மாணவன் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2014 ஜூன் 26 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.றொசாந்த்

யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரிக்கு முன்பாக இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற விபத்தில்  சுன்னாகத்தைச் சேர்ந்த அன்ரனி மனோறாஜ் (வயது 16) என்ற மாணவன் சம்பவ இடத்தில் மரணமடைந்துள்ளதாக   யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர்.

பாடசாலை முடிவடைந்து பஸ்ஸிற்காக காத்திருந்த இம்மாணவன் யாழ். நகரத்திற்குச் செல்லும் கச்சேரி – யாழ்ப்பாணம் மினிபஸ்ஸை மறித்தபோது, அப்பஸ் அவன் மீது மோதியுள்ளது.

இவ்விபத்துடன்  தொடர்புடையதாகக் கருதப்படும் மினிபஸ் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இது தொடர்பில் விரிவான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இம்மாணவன் சென்.ஜோன்ஸ் கல்லூரியில் க.பொ.த.சாதாரண தரத்தில் கல்வி கற்பவர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .