2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கொலைக் குற்றவாளிக்கு மரணதண்டனை

Kanagaraj   / 2014 ஜூன் 26 , பி.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ். சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த பொன்னன் கதிரவேலு என்பவரை 1997 செப்ரம்பர் 17ஆம் திகதி பொல்லால் அடித்துக் கொலை செய்த நபருக்கு, யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் இன்று மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

அத்துடன், மரணதண்டனை விதிக்கப்பட்டவரின் சகோதரருக்கு 5 வருட கடுழீய சிறைத்தண்டனையும் விதித்ததுடன், தந்தையினை விடுதலை செய்தும் தீர்ப்பளித்தார்.

அதேயிடத்தினைச் சேர்ந்த நவரட்ணம் பிரதீஸ்வரன் என்பவருக்கே இவ்வாறு மரணதண்டனை விதிக்கப்பட்டது.
இது பற்றித் தெரியவருவதாவது,

மேற்படி கொலைக் குற்றச்சாட்டில் சுன்னாகம் பகுதியைச்; சேர்ந்த தகப்பன் மற்றும் இரண்டு மகன்கள் ஆகியோரை கைது செய்த சுன்னாகம் பொலிஸார், மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போது, நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

தொடர்ந்து மேற்படி வழக்கு 2006ஆம் ஆண்டு சட்டமா அதிபர் திணைக்களத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு, வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

தொடர்ந்து யாழ். மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த வழக்கு விசாரணைகளைத் தொடர்ந்து பிரதீஸ்வரன் என்பவர் பிரதான குற்றவாளியாக அடையாளங் காணப்பட்டார்.

இந்நிலையில் குறித்த வழக்கு இன்று (26) தீர்ப்பிற்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது, நீதிபதி குறித்த நபருக்கு மரணதண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.
 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .